search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் விலை விவரங்கள்
    X

    பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் விலை விவரங்கள்

    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் பி.எஸ்.என்.எல். ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகைகள் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.

    இரண்டு சலுகைகளும் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. ரூ.777 விலையில் 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இரண்டு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2Mbps ஆக குறைக்கப்படும். புதிய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோர் இரண்டு சலுகைகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ரூ.777 சலுகையை ஒரு வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையில் வழங்கப்படுகிறது. இதே சலுகையை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.23,310 செலுத்தலாம். ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.38,310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.241 சலுகையை மாற்றியமைத்தது. அதன் பின் இந்த சலுகையில் 75 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×