search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MotoG6Plus



    மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான மோட்டோ ஜி6 பிளஸ் மாடலில் 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 4 எம்.பி. அடாப்டிவ் லோ-லைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    முன்பக்கம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ ஜி6 பிளஸ் மாடலில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3டி கிளாஸ் பேக் ஸ்கிராட்ச்-ரெசிஸ்டண்ட் வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ வாய்ஸ், மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் இதர மோட்டோ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் மற்றும் 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதால், சில நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சில மணி நேரங்களுக்கு பேக்கப் பெற முடியும்.



    மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 IPS டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 14nm பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் ஆட்டோஃபோக்கஸ் பிக்சல் தொழில்நுட்பம்,f/1.7, 1.4um பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி ஆடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்

    மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் டீப் இன்டிகோ நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் மாடலின் விலை ரூ.22,499 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. ஆன்லைனில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாகவும், மோட்டோ ஹப் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.
    Next Story
    ×