search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பயனர் விவரங்களை விற்று சர்ச்சையில் சிக்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள்
    X

    பயனர் விவரங்களை விற்று சர்ச்சையில் சிக்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள்

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயனர் விவரங்களை சேகரித்து வழங்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #iOS



    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருக்கும் சில செயலிகள் பயனர்களின் லொகேஷன் விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியது சூடோ செக்யூரிட்டி குழுமம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் வரி விளம்பரங்கள் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவை ப்ளூடூத் எல்.இ. பீக்கன் டேட்டா, ஜி.பி.எஸ். லாங்கிடியூட் மற்றும் லேட்டிடியூட், வைபை எஸ்.எஸ்.ஐடி மற்றும் பி.எஸ்.எஸ்.ஐ.டி. உள்ளிட்டவற்றை கொண்டு பயனரின் லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

    சேகரிக்கப்பட்ட விவரங்களை செயலிகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் பயனர் விவரங்களை விற்று வருகின்றன. சில சமயங்களில் இந்த செயலிகள் செல்லுலார் நெட்வொர்க் எம்.சி.சி./எம்.என்.சி, ஜி.பி.எஸ். ஆல்டிடியூட் மற்றும் பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்களிடம் தகவல் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்கின்றன.



    செயலிகளின் தன்மை சார்ந்து ஜி.பி.எஸ். விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய காரணத்தை மட்டும் குறிப்பிட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறித்த தகவல்களை பயனர்களுக்கு வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

    சில செயலிகள் ஜி.பி.எஸ். விவரங்களுடன் அக்செல்லோமீட்டர் விவரங்கள், பேட்டரி சார்ஜ் நிலவரம் மற்றும் ஸ்டேட்டஸ் என பல்வேறு விவரங்களை சேகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பதாக இதுவரை 24 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



    முன்னதாக வெளியான தகவல்களில் உள்ளூர் மொழிகளில் செய்திகளை வழங்கும் கிட்டத்தட்ட 100 செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களில் நீங்கள் டிராக் செய்யப்படாமல் இருக்க செட்டிங்ஸ் -- பிரைவசி -- அட்வெர்டைசிங் ஆப்ஷன் சென்று லிமிட் ஆட் டிராக்கிங் வசதியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்படாமல் இருக்கும். 

    இத்துடன் லொகேஷன் விவரங்களை சேகரிக்கும் செயலிகள் கூடுதல் விவரங்களுக்கு பிரைவசி பாலிசியை பார்க்கக் கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பது நல்லது. 
    Next Story
    ×