search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    8 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
    X

    8 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பயனர்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. #Jio



    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. 

    இந்தியாவில் ஜியோ துவங்கியது முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    ஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. முன்னதாக கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.



    அதன்படி டெய்ரி மில்க் சாக்லேட் கவரை புகைப்படம் எடுத்து மைஜியோ செயலி மூலம் அப்லோடு செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டாவினை தினமும் வழங்க ஜியோ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஜியோ வாடிக்கையாளர்கள் செலபிரேஷன் பேக் பயன்படுத்த முடியும் என்ற வகையில், ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கூடுதல் டேட்டா மற்றும் அதன் வேலிடிட்டி சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ ஆப் மற்றும் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
    Next Story
    ×