search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    காப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள்
    X

    காப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள்

    ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch



    ஆப்பிள் பதிவு செய்திருக்கும் இரண்டு காப்புரிமைகளில் வளைந்த ஓரங்களுடன் பெரிய ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்கள், OLED டிஸ்ப்ளேக்களுக்கு ஆன்டி-பர்ன்-இன் தீர்வு உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.

    காப்புரிமை விண்ணப்பத்தின் படி, டிஸ்ப்ளேவில் முழுமையான பிக்சல்கள் மற்றும் முழுமையான அளவு கொண்ட பிக்சல்களில் தேர்வு செய்யப்பட்ட ஆன்டி-அலைசிங் பிக்சல்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிக்சல்கள் OLED அல்லது LCD பிக்சல்களாகவோ அல்லது பெரிய டிஸ்ப்ளே பிக்சல்களை கொண்டிருக்கலாம்.

    இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது 15% பெரிய டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் காப்புரிமை விண்ணபம் 20180246363 “Pixel Array Antialiasing to Accommodate Curved Display Edges,” தலைப்பில் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏப்ரல் 2018-இல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வட்டம் அல்லது வளைந்த டிஸ்ப்ளே இன்டர்ஃபேஸ் வழங்க முடியும். பர்ன்-இன் பிழையை சரி செய்ய ஆப்பிள் காப்புரிமையில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    சில தினங்களுக்கு முன் 2018 ஆப்பிள் நிகழ்வினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.00 மணி்க்கு ஆப்பிள் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது. 

    இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED ஐபோன் X பிளஸ், மேம்படுத்தப்பட்ட 5.8 இன்ச் OLED ஐபோன் X, 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல், ஐ.ஓ.எஸ். 12 புதிய ஏ12 பிராசஸர் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×