search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்
    X

    ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. #HuaweiP20



    ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் P20 ப்ரோ மற்றும் P20 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் இதுவரை ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூவாய் அறிவித்துள்ளது. இதேபோன்று மேட் 10 சீரிஸ் மாடல்களும் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் ஹூவாய் நிறுவனம் மோர்ஃபோ அரோரா மற்றும் பியல் வைட் நிறங்களில் ஹூவாய் P20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா மற்றும் லென்ஸ் இமேஜ் தரத்திற்கு சான்று வழங்கும் DxOMark முதல் முறையாக மூன்று இலக்க புள்ளிகளை வழங்கிய முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ மாடல்கள் பெற்றுள்ளன.

    ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை DxOMark தளத்தில் 109 புள்ளிகளை பெற்று இந்த ஸ்மார்ட்போன் முதலிடத்தில் உள்ளது.
    Next Story
    ×