search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் சியோமி முதலிடம்
    X

    அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் சியோமி முதலிடம்

    ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையின் படி இந்தியாவின் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2018 இரண்டாவது காலாண்டில் இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை வளர்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சந்தை முந்தைய வருடத்தை விட 66% மற்றும் 40% அதிகரித்துள்ளது.

    இதே அறிக்கையில் 2018 இரண்டாவது காலாண்டில் பத்து லட்சம் அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் மூன்று நிறுவனங்கள் தங்களது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

    ரிஸ்ட்பேன்ட்களை பொருத்த வரை இந்த காலாண்டில் 90% விற்பனையாகி இருக்கிறது. அணியக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்கள் 34% வளர்ச்சியடைந்துள்ளது.

    நிறுவனங்களை பொருத்த வரை அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் சியோமி நிறுவனம் 45.8% பங்குகளை பெற்றிருக்கிறது. இது முந்தைய காலாண்டை விட 31% அதிகம் ஆகும். கோகி 74% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. விற்பனையில் 36% வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

    மூன்றாவது இடம் டைட்டன் பெற்றிருக்கிறது. டைட்டனின் ஃபாஸ்ட்டிராக் ரிஃப்ளெக்ஸ் ஒட்டுமொத்த விற்பனையில் 56% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, ஃபிட்பிட் நிறுவனம் நான்காவது நிறுவனமாக இறுக்கிறது. லெனோவோ மூன்று காலாண்டுகளுக்கு பின் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

    Next Story
    ×