search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ரூ.12,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் ரூ.12,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

    சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. #galaxys8



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அதன்பின் ரூ.58,900 மற்றும் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.53,990 என விலை மாற்றியமைக்கப்பட்டது.

    இருமுறை விலை குறைக்கப்பட்ட நிலையில், கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூ.12,000 வரை விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ரூ.39,990 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, சமீபத்தில் கேலக்ஸி நோட் 9 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நி்லையில், புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் 128ஜிபி வேரியன்ட் விற்பனை குறைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் இவற்றின் விலை குறைக்கப்படவில்லை.

    கேலக்ஸி எஸ்8 பிளஸ் புதிய விலையில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றப்படும் என தெரிகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி கேலக்ஸி எஸ்8 பிளஸ் வாங்குவோருக்கு பேடிஎம் சார்பில் ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    இத்துடன் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 நானேமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்லிய பிராசஸர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மெமரியை பொருத்த வரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும், 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×