search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தும் சியோமி
    X

    இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தும் சியோமி

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. #1SmartphoneBrand


    ஐ.டி.சி. இந்தியாவினஅ காலாண்டு மொபைல் போன் விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 2018 இரண்டாவது காலாண்டில் மொத்தம் 3.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய மொபைல் சந்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 20% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் மட்டும் விற்பனையானதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    2018 மொபைல் போன் சந்தையின் 79% பங்குகளை முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு முடிவுகளின் படி சாம்சங் நிறுவனம் சியோமியை முந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐடிசி முற்றிலும் முரணான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்திருக்கும் சியோமி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது. சியோமியின் மொத்த விற்பனையில் ஆன்லைன் மட்டும் 56% மற்றும் 33% ஆஃப்லைன் மூலமாகவும் கிடைத்திருக்கிறது.



    ஆன்லைன் பிரிவில் ஹூவாய் ஹானர் பிரான்டு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை இல்லாத அளவு 8% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மற்ற நிறுவனங்களை பொருத்த வரை ஒன்பிளஸ் 6, ரியல்மி 1, அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ சீரிஸ் போன்றவை ஆன்லைனில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் ஆன்லைன் சந்தையின் 44% வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி 36% ஆக அதிகரித்துள்ளது.

    ஆஃப்லைனை பொருத்த வரை விவோ அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. உயர் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனை இந்த காலாண்டில் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6 மாடல்கள் இருக்கின்றன.

    ஃபீச்சர்போன் விற்பனையை பொருத்த வரை 2018 இரண்டாவது காலாண்டில் 4.4 கோடி யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 4ஜி ஃபீச்சர் போன் பிரிவில் ஜியோபோன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியதால், 2017-ஐ விட மொபைல் போன் விற்பனை 29% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #1SmartphoneBrand
    Next Story
    ×