search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone


    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் XT1943 மற்றும் XT1942 மாடல் எண்களில் சீன வலைதளமான TENAA லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் என்ற பெயர்களில் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் உடன் சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோரோலா P30, P30 நோட் மற்றும் P30 பிளே ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ சீன வலைதளத்தில் பட்டியலிட்டப்பட்டன. XT1943 மாடல் நம்பர் கொண்டிருந்த மொபைல் P30 என்றும், XT1942 மாடல் எண் கொண்டிருந்த மொபைல் P30 நோட் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இரண்டு புதிய மாடல்களும் சீனாவில் மோட்டோ இசட்3 அறிமுகமாக இருக்கும் நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 15-ம் தேதி அறிமுகமாக உள்ளது.



    மோட்டோரோலா P30 நோட் / மோட்டோ ஒன் பவர் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4850 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா P30 / மோட்டோ ஒன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - 1.6 / 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 12 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    Next Story
    ×