search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக்
    X

    கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக்

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளன. #Pixel3XL #smartphone


    கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

    முன்னதாக பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் லைவ் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவை அன்பாக்சிங் அனுபவத்தை வழங்கும் படி ஸ்மார்ட்போன் பெட்டியில் உள்ளவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    அதன்படி ஸ்மார்ட்போனுடன், யுஎஸ்பி டைப்-சி ரக ஹெட்போன்கள், யுஎஸ்பி டைப்-சி கேபிள், அடாப்டர், 3.5 எம்.எம். இல் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி டாங்கிள், இன்-இயர் ரக இயர்போன்கள் மற்றும் பேப்பர் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.



    வடிவமைப்பை பொருத்த வரை நாட்ச் ரக டிஸ்ப்ளே, கீழ்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் இருப்பதோடு டிஸ்பளேவின் ஒரு ஓரத்தில் பேட்டரி இன்டிகேட்டர் வடது புறமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்ச் பகுதியில் செல்ஃபி கேமரா மற்றும் வழக்கமான சென்சார்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கூகுள் லோகோ இடம்பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1440×2960 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் எடக்க தலைசிறந்த முறையில் அம்சங்கள் மேம்பட்டு, ஹார்டுவேர் தரப்பிலும் அதிகப்படியான அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. விலை மற்றும் விற்பனை தவிர ஸ்மார்ட்போனின் பெரும்பாலான விவரங்கள் தற்சமயம் லீக் ஆகியுள்ளது. #Pixel3XL #smartphone
    Next Story
    ×