search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - 5ஜி மோட்டோ மாட்ஸ் உடன் அறிமுகம்
    X

    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - 5ஜி மோட்டோ மாட்ஸ் உடன் அறிமுகம்

    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மோட்டோ இசட்3, மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MotoZ3


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ இசட்3 மாடலில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ. போட்டோ அம்சங்கள், கூகுள் லென்ஸ் சப்போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

    முன்பக்கம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் மோட்டோ இசட்3, எடை குறைவாகவும், 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டுல்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், இசட்3 ஸ்மார்ட்போனில் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் வசதி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் டர்போ சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் 5ஜி மோட்டோ மாட் ஒன்றை மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் வெரிசான் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ இசட்3 பெற்றிருக்கிறது. அமெரிக்க டெலிகாம் நிறுவனமான வெரிசான் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் 5ஜி நெட்வொர்க்-ஐ 2019-ம் ஆண்டு வாக்கில் வழங்க இருக்கிறது. 



    மோட்டோ இசட்3 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ் (pDAF)
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.12um பிக்சல்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்

    மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 480 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.32,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் 5ஜி மோட்டோ மாட்ஸ் அமெரிக்காவில் பிரத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MotoZ3 #smartphone

    மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,

    Next Story
    ×