search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதள அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி
    X

    ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதள அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி

    கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. #AndroidP


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான ஆன்ட்ராய்டு பி பீட்டா 4 (DP5) கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே ஆன்ட்ராய்டு பி 9.0 முதல் ஸ்டேபில் வெளியீடு மூன்றாவது காலாண்டு வாக்கில் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான @evleaks தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆகஸ்டு 20-ம் தேதி ஆன்ட்ராய்டு பி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆன்ட்ராய்டு ஓ அறிமுகம் ஆகஸ்டு 21-ம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த தேதி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு பி முதல் பீட்டா வெர்ஷன் கூகுள் I/O 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதன் டெவலப்பர் பிரீவியூ மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது.

    DP1 (டெவலப்பர் பிரீவியூ 1) பல்வேறு புதிய அம்சங்கள்: வைபை ஆர்.டி.டி. மூலம் இன்டோர் பொசிஷனிங், டிஸ்ப்ளே கட்அவுட் அல்லது நாட்ச் சப்போர்ட், மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் அனுபவம், மல்டி-கேமரா சப்போர்ட், ஹெச்.டி.ஆர். வி.பி9 வீடியோ, HEIF இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உள்ளிட்டவையும் பீட்டா 1 (DP 2) அப்டேட் அடாப்டிவ் பேட்டரி, ஜெஸ்ட்யூர் சப்போர்ட் போன்ற அம்சங்களை வழங்கியது.

    அவ்வாறு ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் பெயரை கூகுள் ஆகஸ்டு 20-ம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #AndroidP #Google
    Next Story
    ×