search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் மதிப்பு ஒரு லட்சம் கோடியானது அவ்வளவு பெரிய பெருமை கிடையாது - டிம் குக்
    X

    ஆப்பிள் மதிப்பு ஒரு லட்சம் கோடியானது அவ்வளவு பெரிய பெருமை கிடையாது - டிம் குக்

    ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததையொட்டி, அந்நிறுவன ஊழியர்களுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடிதம் எழுதியிருக்கிறார். #TimCook


    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் கோடி) கடந்ததற்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

    புதிய மைல்கல் சாதனையையொட்டி ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில்,

    “இன்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. வியாழக்கிழமை பங்குச் சந்தை நிறைவின் போது ஆப்பிள் பங்குகளின் விலை 207.39 டாலர்களாக இருந்தது, அதன்படி ஆப்பிள் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. நாம் பெருமை கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன, இது நம் வெற்றியின் மிக முக்கிய அங்கம் கிடையாது. ஆப்பிள் நிறுவன புதுமை, நம் சாதனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை, நம் மதிப்புகளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதற்கான வெளிப்பாடாக நிதிநிலை அறிக்கைகள் இருக்கின்றன.”

    “மிகப்பெரும் சவால்களையும் மனித ஆற்றலின் திறன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். உலகை மாற்ற வித்தியாசமாக நினைப்பவர்களே அவற்றை செய்து முடிக்கின்றனர். இன்றைய உலகில், நம் இலக்கு இதுவரை இருந்ததில், மிகமுக்கியமான ஒன்று ஆகும். நம் சாதனங்கள் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் ஸ்டீவ் செய்ததை போன்றே, நாம் ஆப்பிள் நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில், நமது பணியை ஒன்றிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும்.”

    இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #TimCook #Appletrillion
    Next Story
    ×