search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நோட் 9 ஸ்மார்ட்போனுடன் வெளியாகும் கேலக்ஸி வாட்ச்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி வாட்ச் சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote9 #smartwatch



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் FCC தளத்தில் SM-R815U மாடல் நம்பருடன் சான்று பெற்றிருக்கிறது. இதில் வாட்ச் சாதனம் 51.2 x 43.4 அளவில் 30.2 மில்லிமீட்டர் அல்லது 1.19 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்திருக்கிறது.

    சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என தெரிவித்திருந்தது.



    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களிலும் கேலக்ஸி வாட்ச் மற்றும் நோட் 9 ஒரே நிகழ்வில் அறிமுகமாகி, விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மட்டும் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருப்பதை சாம்சங் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

    கேலக்ஸி வாட்ச் சாதனம் டைசன் ஓ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில், இரண்டு வித வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட உடல்நலம் சார்ந்த அம்சங்கள், உடற்பயிற்சி சார்ந்த தலைசிறந்த செயலிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    கேலக்ஸி வாட்ச் முன்பதிவுகள் ஆகஸ்டு 14-ம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது, இதே தினத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளும் துவங்கயிருக்கிறது. கேலக்ஸி சீரிஸ் முதல் வாட்ச் என்பதால், இந்த சாதனம் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. #GalaxyNote9 #smartwatch
    Next Story
    ×