search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பெரிய டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ இ5 பிளே அறிமுகம்
    X

    பெரிய டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ இ5 பிளே அறிமுகம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motoe5



    மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி-சீரிஸ் மற்றும் இ சீரிஸ்-இல் மொத்தம் ஆறு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ இ சீரிஸ் என்ட்ரி லெவல் மாடலாக மூன்று ஸ்மார்ட்போன்கள் மோட்டோ இ5, மோட்டோ இ5 பிளஸ் மற்றும் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டன.

    மோட்டோ இ5 பிளே அமெரிக்க சந்தையில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் ஐரோப்பியா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் வெளியாக இருக்கிறது. எனினும் இம்முறை ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கூகுளின் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் மோட்டோ லோகோவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்றபடி பிராசஸர், ரேம் சார்ந்த விவரங்கள் வழங்கப்படவில்லை, எனினும் முந்தைய மோட்டோ இ5 பிளே மாடலில் 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு கோ எடிஷன் மாடலில் 1 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற சிறப்பம்சங்கள் அமெரிக்க மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மோட்டோ இ5 பிளே மாடலில் 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம், வாட்டர் ரெஸ்டன்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 425 / 427 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. #motoe5 #smartphone
    Next Story
    ×