search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் ஹானர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் இந்தியா வரும் ஹானர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

    ஹூவாய் ஹானர் பிரான்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #honor



    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு ஜூலை 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்புகளை ஹானர் வெளியிட்டிருக்கிறது. இத்துடன் #NOORDINARYBEAUTY என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் வெவ்வேறு நிறங்கள் மற்றும் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹானர் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஹானர் அறிமுகம் செய்த ஹானர் 9i ஸ்மார்ட்போனின் 2018 வெர்ஷன் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி இது ஹானர் 9X என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.





    ஹானர் 9X / 9i 2018 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின்659 பிராசஸர்
    - மாலி T830-MP2 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியா மற்றும் EMUI 8.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 9X ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கிரீன் மற்றும் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,640) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் இதன் உண்மை விலை இன்னும் சில தினங்களில் தெரியவரும். #honor #smartphone
    Next Story
    ×