search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Xiaomi



    சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    போலாந்து வலைதளம் (X-Kom) மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi A2 லைட் என அழைக்கப்படலாம் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க மற்ற நாட்ச் போன்களை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    சியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் கார்டெக்ஸ் ஏ53 குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், அட்ரினோ 506 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் ஆன்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 5.84 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. 2280x1080 பிக்சல் நாட்ச் ரக டிஸ்ப்ளே மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 12 எம்பி மற்றும் 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட Mi A2 லைட் விலை PLN 999 (இந்திய மதிப்பில் ரூ.18,400) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Xiaomi #smartphone
    Next Story
    ×