search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐபோன்களுக்கான டிஸ்ப்ளேக்களை எல்ஜியிடம் வாங்கும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பயன்படுத்த OLED மற்றும் எல்.சி.டி. ரக டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் வாங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #applenews



    ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் எல்.ஜி. நிறுவனத்திடம் OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஐபோன் மாடல்களில் வழங்க சாம்சங் நிறுவனத்தை அதிகம் நம்ப வேண்டாம் என்ற முடிவினை ஆப்பிள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எலஜி நிறுவனம் 30 முதல் 40 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களையும், சுமார் இரண்டு கோடி எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில் 2018 விலை உயர்ந்த ஐபோன் மற்றும் விலை குறைந்த ஐபோன் மாடல்களுக்கும் எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளேக்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிஜிடைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனத்திடையேயான ஒப்பந்தத்தில் இந்த ஆண்டு மட்டும் 30 மட்டும் 40 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களை உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    ஐபோன் X பிளஸ் வேரியன்ட் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபோன்களுக்கு சாம்சங் டிஸ்ப்ளேக்களை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபோன்களில் வழங்க இரண்டாவது விநியோகஸ்தரை ஆப்பிள் எதிர்பார்த்த நிலையில். இந்த ஆண்டு ஐபோன்களுக்கு சாம்சங் நிறுவனம் 7 கோடி OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று வேரியன்ட் ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 5.8 இன்ச் அளவில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் X மற்றும் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் வேரியன்ட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #iphonexplus #applenews

    Next Story
    ×