search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டூயல் கேமரா, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்
    X

    டூயல் கேமரா, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்

    ஒப்போ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம். #oppoa3s



    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக டூயல் பிரைமரி கேமரா, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்டவை இருக்கிறது.

    6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஒப்போ A3s ஸ்மார்ட்போனில் அழகிய செல்ஃபிக்களை எடுக்க ஒப்போவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக ஒப்போ A3 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய A3s வெளியிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட A3 ஸ்மார்ட்போனில் 19:9 ரக பெசல்-லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி தொழில்நுட்பம் 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.1
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் டார்க் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும் ஒப்போ A3s ஜூலை 15-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. #oppoa3s #smartphone 
    Next Story
    ×