search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.7,000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ.7,000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    தம்பு ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் டிஏ4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவு நிறுவனமான தம்பு டி.ஏ. 2, டி.ஏ. 3 மற்றும் டி.ஏ. 4 என மூன்று ஸ்மார்ட்போன்களையும் எஸ்2440, எஸ்2430, ஏ2400, பி1850, ஏ1810 மற்றும் ஏ1800 உள்ளிட்ட ஃபீச்சர் போன் மாடல்களை ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. 

    புதிய ஸ்மார்ட்போன்களில் டிஏ 3 மாடலினை மே மாதத்தில் வெளியிட்ட நிலையில், தற்சமயம் டிஏ 4 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது.



    தம்பு டி.ஏ. 4 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 640x1280 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போன் ஜெட் பிளாக், ஷேம்பெயின் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் 200 நாட்களுக்கு ஸ்மார்ட்போனினை வாரன்டி அடிப்படையில் மாற்றிக் கொள்ளவும், 365 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கிரீனினை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க 600-க்கும் அதிக சர்வீஸ் மையங்களை வைத்திருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 1000-ஆக அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×