search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் வழங்கப்படலாம் என தகவல்

    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் அந்நிறுவனம் மூன்று கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பத்தாவது எடிஷன் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் என்ற வகையில் புதிய சீரிஸ் பல்வேறு வேரியன்ட்களில் வெளியிடப்படும் என்றும் இதில் ஒரு மாடலில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ்-இன் டாப் என்ட் மாடலில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் மிட்-சைஸ் கேலக்ஸி எஸ்10 மாடலில் சூப்பர் வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வைடு-ஆங்கிள் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் அல்லது ஆப்டிக்கல் இமேஸ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதேபோன்ற செட்டப் எல்ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் எவ்வித தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இத்துடன் வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களின்படி கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

    இதேபோன்று சாம்சங் நிறுவனம் பியான்ட் 0, பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 என்ற பெயர்களில் மூன்று சேம்பில்களை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இவற்றில் பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் பியான்ட் 0 மாடல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×