search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வெளியாகும் ஒன்பிளஸ் 6
    X

    சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வெளியாகும் ஒன்பிளஸ் 6

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலை சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலின் ரெட் நிற வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்தது. முன்னதாக மிரர் பிளாக், சில்க் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.

    தற்சமயம் ட்விட்டரில் 'ஐஸ் யுனிவர்ஸ்' என அறியப்படும் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6 புதிய வேரியன்ட்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இத்துடன் பர்ப்பிள் நிறத்திலும் ஒன்பிளஸ் 6 அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய ஒன்பிளஸ் 6 ஹூவாய் P20 போன்று கிரேடியன்ட் நிறம் கொண்ட வெர்ஷன் வெளியிடப்படலாம் என தெரிவித்திருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஃபைபர் போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பிளாக் நிற வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நிற வெர்ஷன்கள் ஒன்பிளஸ் 6 என்ட்ரி லெவல் மாடலான 6 ஜிபி ரேம் வேரியன்ட்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட் நிற ஷேட் பெற சில காலம் ஆன நிலையில், புதிய நிறங்கள் வெளியாகவும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான சிவப்பு நிறத்தை பெற கடினமாக உழைத்திருக்கிறோம், இதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டது என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
    Next Story
    ×