search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை கிடைத்திருக்கும் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அந்த வகையில் இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எல்டர் முர்தாசின் வழங்கியிருக்கிறார்.

    அமெரிக்க தயாரிப்பு மையத்தில் மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த அம்சங்களை மதிப்பீடு செய்திருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, இயக்கம், வன்பொருள் அம்சங்கள் மற்றும் கேலக்ஸி எஸ்10 மாடல் குறித்த தகவல்களை வழங்கி இருக்கிறார்.

    வடிவமைப்பை பொருத்த வரை கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பார்க்க நோட் 8 போன்றே காட்சியளிக்கும் என்றும் பின்புறம் மட்டும் சில மாற்றங்களை கொண்டிருக்கும். ஏற்கனவே வெளியான தகவல்களில் பின்புறம் கைரேகை சென்சார் டூயல் கேமராக்களின் கீழ் மாற்றப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

    அதிக பேட்டரி திறன் கொண்டிருக்கும் என்பதால் கேலக்ஸி நோட் 9 அதிக எடை கொண்டிருக்கும். அந்த வகையில் கேலக்ஸி நோட் 9 மாடலில் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரி இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.



    கேலக்ஸி நோட் 9 மாடலில் புதிய எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வேரியன்ட்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சி்ப்செட், மற்ற சந்தைகளில் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க கேமராவில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ISOCELL தொழில்நுட்பம், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எஸ் பென் அம்சங்களை பொருத்த வரை ப்ளூடூத் வதி, ரிமோட் அன்லாக் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூரிய வெளிச்சத்திலும் சிறப்பாக இயக்கும் படி கேலக்ஸி நோட் 9 டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ப்ரோடோடைப் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    புகைப்படம்: நன்றி All About Samsung
    Next Story
    ×