search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்
    X

    மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மர்மமான சர்ஃபேஸ் சாதனம் குறித்த விவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கசிந்து வருகிறது. ஆன்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்ள் இதுவரை காப்புரிமைகள், அறிக்கைகள் மற்றும் இயங்குதள விவரங்களில் கசிந்து வந்தது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் டூயல் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன அறிக்கைகளில் இந்த சாதனம் பாக்கெட் சர்ஃபேஸ் சாதனமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஆன்ட்ரோமெடா திட்டம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுள் ரகசியமாக உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு சந்தையில் புதிதாகவும், சீர்குலைக்கும் சாதனமாக ஒட்டுமொத்த சர்ஃபேஸ் சாதனங்களுக்கு உதாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரிடையே இருக்கும் பிரிவை குறைக்கும் என கூறப்படுகிறது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆன்ட்ரோமெடா இதுவரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் ராப்-அரவுன்ட் டிஸ்ப்ளே சாதனம் முழுமையாக திறக்கப்படும் போது ஹின்ஜ் மற்றும் டிஸ்ப்ளே பகுதியை மறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் வழங்குவதற்கான ஸ்டைலஸ்-ஐ மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

    இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் ஸ்டைலஸ்கள் மற்றும் நோட்பேட் போன்ற செயலிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த சாதனத்தில் ஏ.ஆர்.எம். பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் இன்டெல் அல்லது குவால்காம் சிப்செட்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×