search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகள் முழுமையாக மாற்றியமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதன்படி அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சலுகை ஜூலை 1-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால், தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.1,999 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை அறவித்தது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகை மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.99-இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,525 வரை கிடைக்கிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.99 சலுகையில் ஒரு மாத காலத்துக்கு 500 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.1,525 சலுகையில் தினசரி டேட்டா அளவில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என கூறப்படுகிறது. அனைத்து சலுகைகளிலும் மற்றபடி எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதேபோன்று பி.எஸ்.என்.எல். ஆட்-ஆன் சலுகைகள் ரூ,.50 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,711 வரை கிடைக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 விலையில் ஒரே ஒரு போஸ்ட்பெயிட் சலுகையை வழங்குகிறது. 25 ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் இந்த சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், பயனர்கள் ஒரு ஜிபி டேட்டாவினை ரூ.20 கட்டணம் செலுத்தி பயன்படுத்த முடியும்.
    Next Story
    ×