search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐபோனுக்கு சவால் விடும் விவோ புதிய தொழில்நுட்பம்

    ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது.




    ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பதில் விவோ தனது வழக்கமாக்கி வருகிறது.

    விவோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் கேமரா போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது. 

    ஷாங்காய் நகரில் துவங்கியிருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ் ஐடி போன்று வேலை செய்யும் புதிய அம்சம் ஐபோன் X-ஐ விட சிறப்பாகவும், மிக துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



    விவோ அறிமுகம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள 3D டெப்த் சென்சிங் சிஸ்டம் 3,00,000 சென்சார் பாயின்ட்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் உள்ள டைம் ஆஃப் ஃப்ளைட்' (Tof) அம்சத்தை பயன்படுத்தி இந்த அம்சம் வேலை செய்கிறது. 

    தி வெர்ஜ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விவோவின் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் இருந்து முகம் 3 மீட்டர் தொலைவில் இருந்தாலும் சீராக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் ஆஃப் ஃப்ளைட் 3D சென்சிங் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்து, எதிர்காலத்தில் புதிய அம்சங்களை கண்டறிவதாக விவோ தெரிவித்துள்ளது.

    எதிர்கால ஸ்மார்ட்போன்களில் ஜெஸ்ட்யூர் மற்றும் மோஷன் ரெகஃனீஷன்களில் புதிய சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் கான்செப்ட் கிடையாது என்றும் இதனை அதிகளவு தயாரிக்க தயார் நிலையில் இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது.
    Next Story
    ×