search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 வெளியீட்டு தேதி
    X

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 வெளியீட்டு தேதி

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஆகஸ்டு மாதம் நடைபெற இருப்பதை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

    ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு நோட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்கிறது. 

    சாம்சங் புதிய நோட் ஸ்மார்ட்போனில் 512 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் கேலக்ஸி எஸ்9 மாடலின் 256 ஜிபி வேரியன்ட் போன்று கிடைக்குமா அல்லது லிமிட்டெட் எடிஷனாக விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போனிலேயே சாம்சங் பிக்ஸ்பி 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    கடந்த வாரம் FCC வலைத்தளத்தில் காணப்பட்ட நோட் 9 ஸ்மார்ட்போன்  பிளாக், புளு, கிரே, லாவென்டர் மற்றும் புதிய பிரவுன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் அறிமுக விழா ஆகஸ்டு 9-ம் தேதி காலை 11.00 மணி (இந்திய நேரப்படி இரவு 8.30 மணி) துவங்குகிறது. கேலக்ஸி நோட் 9 அறிமுக விழா சாம்சங் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது. 
    Next Story
    ×