search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    2018 நிகழ்வில் ஆறு புதிய சாதனங்களை வெளியிடும் ஆப்பிள்

    2018 செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஆறு புதிய சாதனங்களை வெளியிட இருப்பதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.





    ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ 2018 ஆப்பிள் வெளியீடு குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய வடிவமைப்பு, பெரிய திரை கொண்ட வாட்ச், குறைந்த விலை மேக்புக் ஏர், ஃபேஸ் ஐடி வசதி கொண்ட ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

    2019 ஐபோன்களில் முற்றிலும் புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களின் விற்பனை மற்ற மாடல்களை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

    இத்துடன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட புதிய ஐபேட், விலை குறைந்த மேக்புக் ஏர், பெரிய டிஸ்ப்ளே கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என்றும், 2018 ஐபோன்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X, 6.5 இன்ச் திரை கொண்ட ஐபோன் X பிளஸ் மற்றும் 6.1 இன்ச் ஐபோன் என மூன்று மொபைல் போன்களை அறிமுகம் செய்யலாம்.

    6.1 இன்ச் ஐபோன் விற்பனை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் பட்சத்தில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விற்பனையும் இதே காலகட்டத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன் மாடல்களில் அனைத்தும் செப்டம்பர் மாத வாக்கில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க சந்தையில் 6.1 இன்ச் ஐபோன் வாங்குவோர் தங்களது பழைய ஐபோன்களை வழங்கி, புதிய மாடலுக்கு அப்கிரேடு செய்து கொள்ளக்கூடிய வகையில் சலுகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் 6.1 இன்ச் ஐபோன் விலை மற்ற மாடல்களை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×