search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மிட்நைட் பிளாக் 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 அறிவிப்பு
    X

    மிட்நைட் பிளாக் 8 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 அறிவிப்பு

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிட்நைட் பிளாக், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.





    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் உள்ளிட்ட வேரியன்ட்கள் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இருவித மெமரிக்களில் வெளியிடப்பட்டது. இதன் மார்வெல் அவெஞ்சர்ஸ் எடிஷன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருந்தது.
     
    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மிட்நைட் பிளாக் வெர்ஷன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 256 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 மிட்நைட் பிளாக் வெர்ஷன் விற்பனை ஜூலை 10-ம் தேதி அமேசான் வலைத்தளத்திலும், ஜூலை 14-இல் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் மையங்களில் நடைபெற இருக்கிறது. புதிய வேரியன்ட்-க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.



    சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் 256 ஜிபி வேரியன்ட் அதிக வரவேற்பை பெற்று வருவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் 6 விற்பனை பத்து லட்சத்துக்கும் அதிக யூனிட்களை கடந்திருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது.

    அதன் படி புதிய ஒன்பிளஸ் 6 வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி மற்றும் அதிகபட்சம் ரூ.1500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக் மற்றும் பிரபல வங்கிகளின் வட்டியில்லா மாத தவனை முறை வசதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.1500 வரை தள்ளுபடி பெற முடியும். அமேசான் வழங்கும் ஒன்பிளஸ் ரெஃபரல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×