search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முழுமையான பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்

    சாம்சங் நிறுவனம் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்க அனுமதி பெற்றிருக்கிறது.




    ஸ்மார்ட்போன் சந்தையில் 2018-ம் ஆண்டில் பல்வேறு ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கின்றன. பெசல்-லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை இதுவரை விவோ மற்றும் ஒப்போ போன்ற பிரான்டுகள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில், சாம்சங் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.

    சமீபத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கும் காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்க சாம்சங் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்டு 24, 2017-இல் சாம்சங் பதிவு செய்த காப்புரிமையானது ஜூன் 21, 2018-ம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தால் உறுதி செய்யப்பட்டது. 

    சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் நான்கு ஸ்ட்ரிப்கள் டிஸ்ப்ளேவின் நான்கு ஓரங்களிலும் இணைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரிப்கள் மெட்டல், அலுமினியம் மூலம் உருவாக்கவோ அல்லது பேட்டன் செய்யப்பட்ட மரத்தை பயனர் மாற்றக்கூடிய சாதனங்களாகவோ மாற்ற முடியும்.

    இதே போன்ற வடிவமைப்பு தொலைகாட்சிகள், மானிட்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்ற சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இத்துடன் இதே போன்ற வடிவமைப்பு ஹூவாய் ஏற்கனவே பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்குகிறது. 

    எனினும் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    Next Story
    ×