search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிக்சல் 2 விலை ரூ.10,999 தான் - கூட்டி கழித்து பார்த்தா கணக்கு சரியா வரும்
    X

    பிக்சல் 2 விலை ரூ.10,999 தான் - கூட்டி கழித்து பார்த்தா கணக்கு சரியா வரும்

    ப்ளிப்கார்ட் சூப்பர் வேல்யூ வீக் எனும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகர சலுகைகள் அறவிக்கப்பட்டுள்ளன.




    ப்ளிப்கார்ட் சூப்பர் வேல்யூ வீக் சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 24-ம் தேதி வரை நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி, பைபேக் கேரன்டி, தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 2, ஐபோன் 6, மோட்டோ X4 மற்றும் பல்வேறு பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகர சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் ரூ.70,000 விலையில் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 2 (128 ஜிபி) ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.10,999 மதிப்பில் பெற முடியும். இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.199 செலுத்தி பைபேக் கேரன்டி சலுகையை வாங்க வேண்டும். சிறப்பு விற்பனையில் ரூ.9,001 தள்ளுபடி செய்யப்பட்டு பிக்சல் 2 விலை ரூ.60,999-க்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.8,000 கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 



    இதனால் பிக்சல் 2 (128 ஜிபி) விலை ரூ.52,999-க்கு கிடைக்கிறது. இத்துடன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை 6 முதல் 8 மாதங்களில் திரும்ப வழங்கும் போது ரூ.42,000 வரை எக்சேஞ்ச் பெற முடியும். பிக்சல் 2 (64 ஜிபி) மாடலை வாங்கும் போது ரூ.37,000 பைபேக் கேரன்டி வழங்கப்படுகிறது.

    இதேபோன்று மோட்டோ X4 ஸ்மார்ட்போன் பைபேக் கேரன்டி மூலம் ரூ.6,999-க்கு பெற முடியும். மோட்டோ X4 வாங்குவோர் கூடுதலாக ரூ.199 பைபேக் சலுகையை பெறும் போது ரூ.16,000 வரை பைபேக் கேரன்டி வழங்கப்படுகிறது. இதே சலுகை மோட்டோ ஜி6 பிளே, மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் மற்றும் ரெட்மி நோட் 5 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பைபேக் கேரன்டி சலுகையுடன் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது. மாத தவனை முறையில் ரூ.299, ரூ.499 மற்றும் ரூ.999 பிரிவுகளிலும், பிரீமியம் வட்டியில்லா மாத தவனை முறை வசதியில் மாதம் ரூ.1,999 வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவனை முறை வசதி ஹெச்டிஎஃப்சி அல்லது பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவற்றை கொண்டு பெற முடியும்.
    Next Story
    ×