search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.4,000 பட்ஜெட்டில் ஈசிஃபோன் கிரான்ட் அறிமுகம்
    X

    ரூ.4,000 பட்ஜெட்டில் ஈசிஃபோன் கிரான்ட் அறிமுகம்

    சீனியர்வொர்ல்டு எனும் நிறுவனம் முதியோர் பயன்படுத்த ஏதுவாக ஈசிஃபோன் கிரான்ட் எனும் மொபைல் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    சீனியர்வொர்ல்டு எனும் நிறுவனம் தனது ஈசிஃபோன் பிரான்டின் கீழ் புதிய மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. ஈசோஃபோன் கிரான்ட் என அழைக்கப்படும் இந்த மொபைல் போன் முதியோருக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த காலத்துக்கு ஏற்ப பாதுகாப்பாகவும், எந்நேரமும் இணைப்பில் இருக்க ஏதுவாக இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சீனியர்வொர்ல்டு தெரிவித்துள்ளது.

    ஒலியை கட்டுப்படுத்த பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மற்றும் ஒற்றை மொபைல் போனாக ஈசிஃபோன் கிரான்ட் இருக்கிறது. காது கேட்கும் குறைபாடு இருப்பவர்களில் கூடுதல் உபகரணங்களை பயன்படுத்த விரும்பாதோருக்கு இந்த மொபைல் சிறப்பான தீர்வாக இருக்கும்.



    ஈசிஃபோன் கிரான்ட் மொபைலில் பயன்படுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பம்  ஆடியோவை அழைப்புகள் மட்டுமின்றி தொலைகாட்சிகளை பார்க்கும் போது மட்டுமின்றி, மற்றவர்களுடன் பேசும் போதும் சிறப்பாக வேலை செய்கிறது. முதியோருக்கு ஏற்ற வகையில் ஆடியோ அதிக ஒலியை வழங்குவதோடு, அது சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போன் டையலிங், விருப்பமான கான்டாக்ட்களுக்கு கீ ப்ரெஸ் அம்சம், எஸ்ஓஎஸ் பட்டன் (அவசர அழைப்புகளை மேற்கொள்ளலாம்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய எழுத்துக்கள், குவாட் பேன்ட், ரிமைன்டர் அம்சம், எஸ்எம்எஸ் மற்றும் சைரன் மற்றும் எஃப்எம் போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வால்யூம் பட்டன், டார்ச் மற்றும் லாக் / அன்லாக் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் ஈசிஃபோன் கிரான்ட் விலை ரூ.3,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த மொபைல் போனினை சீனியர்வொர்ல்டு அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×