search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 3 ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 3 ஸ்மார்ட்போன்

    கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் இதன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    வாஷிங்டன்:

    கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. இதுவரை பிக்சல் ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மற்றும் இதர விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியான நிலையில், XDA தளத்தில் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது.






    புகைப்படங்கள்: நன்றி XDA

    கிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்குகிறது.

    வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் முந்தைய பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களை போன்றே வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கைரேகை சென்சார் பின்புறமும், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 6-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் ரக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அனைத்து புகைப்படங்களும் வெளியாகி இருக்கும் நிலையில், சிறிய பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சார்ந்த தகவல்கள் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
    Next Story
    ×