search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்

    இந்தியாவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக விவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பிதழில் X என்ற வார்த்தை பெரிதாக இடம் பெற்றிருக்கிறது. 

    அந்த வகையில் இது அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் வெளியிட்ட X21 மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    இந்தியாவில் விவோ நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட விவோ X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 12 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ X21 6 ஜிபி ரேம் மாடல் 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய விவோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும்.
    Next Story
    ×