search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9 இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி முன்பக்க கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு செல்ஃபி புகைப்படங்களை அழகாக்கும் ஏஐ பியூட்டி (AI Beauty) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 3080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×