search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை
    X

    தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை

    வோடபோன் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone
    மும்பை:

    வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இரண்டு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.569 மற்றும் ரூ.511 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 3 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன.

    தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் கிடைக்கும் ரூ.569 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாட்டு அளவுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    ரூ.511 விலையில் கிடைக்கும் புதிய வோடபோன் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இரண்டு புதிய சலுகைகளிலு்ம வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன.



    வோடபோன் அறிவித்திருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையில் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாய்ஸ் கால் மேற்கொள்ளும் போது வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுக்கப்படும்.

    இதே போன்ற சேவைகளை வழங்கும் இரண்டு புதிய சலுகைகளை வோடபோன் ஏற்கனவே வழங்கி வருகிறது. ரூ.549 வோடபோன் சலுகையில் தினமும் 3.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கும், ரூ.509 வோடபோன் சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கும் வழங்கப்படுகின்றன.

    வோடபோன் போன்றே ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.448 சலுகையில் இதே போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.498 சலுகையில் 91 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

    சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த ரூ.219 புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. #Vodafone
    Next Story
    ×