search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட்டின் அதிரடி திட்டம்

    அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக வலைத்தளங்கள் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும் விற்பனை திருவிழாவினை அடுத்த மாதம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் வியக்க வைக்கும் சலுகைகளை வழங்கும் விற்பனை திருவிழாவினை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆன்லைன் வர்த்தக துறையை சார்ந்த வல்லுநர்கள் அளித்திருக்கும் தகவல்களில் இரு நிறுவனங்களும் கிட்டதட்ட 70 முதல் 80% பொருட்களை வாங்கி குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள், தொலைகாட்சி, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து வித பொருட்களுக்கும் சிறப்பு விற்பனை, அதிரடி தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்க பிளிப்கார்ட் மற்றும் அமேசான் திட்டமிட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்பட்ட பொருட்களின் விலையை தள்ளுபடி காலத்தில் மட்டும் குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    கோடை கால சிறப்பு விற்பனையில் ஆடைகளுக்கு 70 முதல் 80% வரையிலான தள்ளுபடி, ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் மின்சாதங்களுக்கு 10 முதல் 20% வரை கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இந்திய ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் மட்டும் சுமார் 60% பங்கு வகிக்கிறது.

    இத்துடன் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவனை முறை வசதி உள்ளிட்டவற்றை வழங்கவும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்கள் திட்டமிட்டுள்ளன. விற்பனை திருவிழா நடைபெற இருப்பதை பிளிப்கார்ட் அதிகாரி உறுதி செய்திருக்கும் நிலையில், மற்ற விவரங்களை வழங்கவில்லை.

    புதிய விற்பனை திருவிழா மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். இது எங்களின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் சிறிய வெர்ஷனாக இறுக்கும் என அவர் தெரிவித்தார். இந்த விற்பனை திருவிழாவில் கோடை காலத்திற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் தொலைகாட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் இதர பிரிவுகளில் உள்ள சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.
    Next Story
    ×