search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் அமேசானில் ஒன்பிளஸ் 6
    X

    விரைவில் அமேசானில் ஒன்பிளஸ் 6

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது. 

    ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அல்லது அடுத்த ஸ்மார்ட்போனாக புதிய ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஒன்பிளஸ் 6 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் புத்தம் புதிய அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் 6 குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் சார்பில் பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வரும் நிலையில், தற்போதைய தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.



    அதிவேக ஸ்மார்ட்போன் என்ற பெயரில் புதிய ஒன்பிளஸ் 6 அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. முந்தைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் வழங்க இருப்பதாக இதுவரை அறிவித்திருக்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் முன்பக்கம் நாட்ச் வழங்குவது டிரென்ட் ஆக இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் திரை அளவு முன்பை விட அதிகமாக கிடைக்கும். 



    இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்தும் போதும் புதிய ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத வேகம் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்கும் போதும் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் ஆய்வு குழுவில் டீம் FSE (Fast, Stable, Efficient) உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு ஒன்பிளஸ் சாதனங்களின் திறனை அதிகரிக்கும் பணியை பிரத்யேகமாக மேற்கொள்ளும். இதுதவிர ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் மற்ற சாதனங்களை போன்று அலெர்ட் ஸ்லைடர் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. 



    அந்த வகையில் ஆக்சிஜன் ஓஎஸ் கொண்டு ஸ்டே அவேக், அக்சென்ட் கலர் கஸ்டமைசேஷன், அலெர்ட் ஸ்லைடர் அப்டேட் மற்றும் இதர அம்சங்களை வழங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதை ஒன்பிளஸ் டீசர் தெரியப்படுத்தியுள்ளது. 

    சமீபத்தில் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்திற்கு மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்திருப்பதை ஒன்பிளஸ் அறிவித்தது. இதனால் புதிய ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
    Next Story
    ×