search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரை சலுகை

    பேடிஎம் மால் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் மால் வலைத்தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    பேடிஎம் மால் வழங்கும் சிறப்பு சலுகையில் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி நோட் 8 போன்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே, கேலக்ஸி எஸ்9 மிட்நைட் பிளாக் மற்றும் கேலக்ஸி எஸ்8 பர்கன்டி ரெட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது, கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் வாங்குவரோக்கு ரூ.9000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி ஏ8 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ரூ.67,900க்கு விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் கேஷ்பேக் சலுகையுடன் ரூ.57,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி எஸ்8 பர்கன்டி ரெட் ஸ்மார்ட்போன் கேஷ்பேக் சலுகையுடன் ரூ.39,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் கேஷ்பேக் சலுகையுடன் ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் ரூ.48,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ.57,900 ஆகும்.

    கேஷ்பேக் சலுகையை பெற பேடிஎம் மால் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இதே சலுகை சாம்சங் ஷாப், சாம்சங் ஸ்மார்ட்கஃபே சாம்சங் ஸ்மார்ட்பிளாசா மற்றும் இதர சாம்சங் பிரத்யேக விற்பனை மையங்களிலும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பேடிஎம் செயலியில் வாங்குவோர் ப்ரோமோ கோடினை பதிவு செய்து சலுகைகளை பெற முடியும்.
    Next Story
    ×