search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோ ஜி6 டீசரில் வெளியான அதிகாரப்பூர்வ அம்சங்கள்
    X

    மோட்டோ ஜி6 டீசரில் வெளியான அதிகாரப்பூர்வ அம்சங்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ டீசரில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
    புதுடெல்லி:

    பிரேசில் நாட்டில் புதிய மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இதன் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் லெனோவோவின் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோரோலா வெளியிட்டிருக்கும் டீசரில் இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும், மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    டீசர் வீடியோவில் கருப்பு நிற ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், முன்பக்க கைரேகை சென்சார் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அலெர்ட் ஸ்லைடர் போன்ற புதிய பட்டன் வால்யூம் ராக்கர் பட்டனுடன் காணப்படுகிறது. டிஸ்ப்ளேவின் மேல் மெல்லிய ஸ்பீக்கர் கிரில் காணப்படுகிறது, இது ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்றும் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் டீசரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் விவரிக்கப்படவில்லை. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டாகோர் சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    புகைப்படம்: நன்றி Killer Features

    மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.93 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டாகோர் சிப்செட், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ரென்டர்களில் ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, வோல்ட்இ சப்போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×