search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் ஐபோன் 8 ஸ்பெஷல் எடிஷன்
    X

    விரைவில் இந்தியா வரும் ஐபோன் 8 ஸ்பெஷல் எடிஷன்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஸ்பெஷல் எடிஷன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் புதிய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மொபைல் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இன்று (ஏப்ரல் 10) மாலை 6.00 மணி முதல் முன்பதிவு செய்யப்படும் சிவப்பு நிற ஐபோன் 8 சீரிஸ் மே மாத வாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சிவப்பு நிற எடிஷன் விலை ரூ.67,940 முதல் துவங்குகிறது. 

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய ஐபோன் 8 சீரிஸ் மாடலில் வழக்கமான ஐபோன் 8 மாடல்களில் காணப்பட்ட கிளாஸ் என்க்ளோஷர் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் புதிய அம்சமாக மிளிரும் சிவப்பு நிறம், இதற்கு ஏற்றார் போல் அலுமினியம் பேன்ட் வழங்கப்பட்டுள்ளது.



    மற்றபடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களில் உள்ளதை தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் புதிய சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் புதிய லெதர் ஃபோலியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் இந்த லெதர் ஃபோலியோ விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.7,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெதர் ஃபோலியோவுடன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டும் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களும் கிடைக்கிறது.

    ஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×