search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் ஜியோ சர்ப்ரைஸ்

    ஐபிஎல் 2018 கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் ஏர்டெல் போன்றே அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேக 4ஜி டேட்டா வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோவுன் MIMO பிரீ-5ஜி தொழில்நுட்பத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரில் இந்த தொழில்நுட்பம் கொண்டு அதிவேக இண்டர்நெட் வழங்க இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    அந்த வகையில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் கிரிகெட் மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்பட இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பிரீ-5ஜி மேசிவ் MIMO யூனிட்களை நிறுவி அதன்மூலம் நெட்வொர்க் திறனை ஐந்து மடங்கு வரை அதிகரிக்க இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவப்பட இருக்கிறது. இங்கு நடைபெற இருக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதேபோன்று டெல்லி, மும்பை நகரங்களின் குறிப்பிட்ட இடங்களில் அதிவேக வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட இருக்கிறது. 



    மேசிவ் MIMO தொழில்நுட்பம் முப்பறிமான பீம்களை பயனர் இருக்கும் திசைகளில் பீய்த்தடிக்கும். இதனால் நெட்வொர்க் சம அளவில் பரப்பப்பட்டு, எவ்வித குறுக்கீடும் இன்றி அதிவேக இணைய வசதியை பெற முடியும். இதனால் பயனர் அனுபம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ போன்றே ஏர்டெல் நிறுவனமும் மேசிவ் MIMO தொழில்நுட்பத்தை ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்களில் நிறுவ இருக்கின்றன. அதன் படி சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொகாலி, இன்டூர், ஜெய்பூர்  மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்படுகின்றன.
    Next Story
    ×