search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு
    X

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

    சாம்சங் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நாடு முழுக்க குறைக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி கேலக்ஸி எஸ்8 விலை ரூ.49,990 மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலை ரூ.53,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் 64 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் 256 ஜிபி வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 (64ஜிபி) விலை ரூ.57,900 மற்றும் 128 ஜிபி விலை ரூ.61,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜிபி ரூ.64,900 மற்றும் 128 ஜிபி ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    கேலக்ஸி எஸ்8 சீரிஸ் விலை குறைக்கப்பட்டிருப்பது விற்பனையை அதிகரிக்க வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்9 வடிவமைப்பில் முந்தைய கேலக்ஸி எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளித்தாலும் பிராசஸர், கேமரா மற்றும் இதர சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

    கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 8895 சிப்செட் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த மாடலாக கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் இருக்கிறது. கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே பேனல், கேலக்ஸி எஸ்8 பிளஸ் மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி டூயல் பிக்சல் கேமரா, கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஹெச் பேட்டரி, கேலக்ஸி எஸ்8 பிளஸ் மாடலில் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×