search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஹூவாய்

    ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் சந்தையின் அடுத்த டிரென்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாகவே இருக்க வேண்டும். சாம்சங், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் வரிசையில் ஹூவாய் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தை உருவாக்க காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்படுகிறது. மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் இந்த சாதனம் காட்சியளிக்கும் என காப்புரிமையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவன நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யு இந்த சாதனத்தின் ப்ரோடோடைப் ஹூவாய் உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களின் இடையே இடைவெளி இருப்பதாகவும், இதனை முழுமையாக சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 



    காப்புரிமையில் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த சாதனம் நோட்புக் போன்று காட்சியளிக்கிறது. சாதனத்தை திறந்தால் செவ்வக வடிவம் கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. சமீபத்தில் ஹூவாய் நிறுவனம் P சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 

    புதிய ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்ட்டிருக்கிறது. இதன் மேட் ஆர்எஸ் மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×