search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    குறைந்த விலையில் 1 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை
    X

    குறைந்த விலையில் 1 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

    பாரதி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்படுவதை மை ஏர்டெல் செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    புதிய ஏர்டெல் சலுகையின் விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 3ஜி அல்லது 2ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி டேட்டா வழங்கப்படுவதால் டேட்டா வேகம் குறைவாகவே இருக்கும்.

    இதேபோன்று ஏர்டெல் ரூ.49 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தினசரி டேட்டா சலுகைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. இவற்றில் வாடிக்கையாளர்கள் ரூ.49க்கு 1 ஜிபி டேட்டா பெற முடியும்.



    ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை தொடர்ந்து ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டர்களுக்கு ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. இலவச டேட்டா வழங்குவதன் மூலம் பீட்டா டெஸ்டர்கள் பரிந்துரைகளை வழங்குவர். இதன் மூலம் ஏர்டெல் வோல்ட்இ சேவைகளை மெல்ல சோதனை செய்ய துவங்கியுள்ளது.

    ஏர்டெல் பீட்டா டெஸ்டிங் செய்வோர் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் அனுபவிக்க நேரிடும் என்றும், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டிங்கில் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும்.

    பீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம் கார்டு, மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டும். சமீபத்தில் ஏர்டெல் வோல்ட்இ கொல்கத்தாவில் வழங்கப்பட்ட நிலையில், மும்பை, மகாராஷ்ட்ரா, கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஏர்டெல் போன்று ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சேவைகளை பார்க்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 விலையில் சலுகை வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஜியோ சலுகை விலை அதிகம் என்றாலும், 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×