search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஸ்டீவ் ஜாப்ஸ்
    X
    கோப்பு படம்: ஸ்டீவ் ஜாப்ஸ்

    2020-இல் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாகவும், 2020-இல் இந்த ஐபோன் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக பேங் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் நிறுவனத்தின் வம்சி மோகன் தெரிவித்ததாக சிஎன்பிசி தகவல் வெளியிட்டிருக்கிறது.

    இதுவரை வெளியிடப்படாத புதிய தொழில்நுட்பமாக மடிக்கக்கூடிய மொபைல் போன் பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் இதே போன்ற மொபைல் போனினை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த பட்டியலில் ஆப்பிள் இணைந்திருக்கிறது.

    மடிக்கக்கூடிய மொபைல் போன் தொழில்நுட்பத்தை சாம்சங் கேலக்ஸி X சாத்தியப்படுத்தலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதற்கான கான்செப்ட் மாடலை ஏற்கனவே வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து இதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் ஜெ மேக்ரிகோர் இந்த தொழில்நுட்பம் தற்சமயம் வரை கான்செப்ட் போன்றே இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

    அந்த வகையில் ஐபேட் போன்று பெரிய சாதனம் பாதியாக மடிக்கும் போது மொபைல் போன் வடிவிலான சாதனமாக மாறுவது சற்றே சாத்தியமான ஒன்றாக கருத முடியும். இந்த ஃபேப்லெட் பாதியாக மடிக்கப்பட்ட நிலையில் மொபைல் போனாக இருக்கும். எனினும் இவ்வகை டிஸ்ப்ளேக்களில் இருக்கும் டிரான்சிஸ்டர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால், இவை உறுதியாக இருக்காது என குவால்காம் நிறுவன டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான மேலாளர் தெரிவித்து இருக்கிறார்.



    கோப்பு படம்: ஐபோன் X

    கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான காப்புரிமை தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட சாதனத்தின் ஒரு பகுதியை மடிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என தெரியவந்தது. இதேபோன்று OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் உருவாவதாகவும், இதற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் நிறுவனத்திற்கு மாற்றாக எல்ஜி நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. 

    தற்போதைய சாம்சங் கேலக்ஸி நோட் மற்றும் எஸ் ஸ்மார்ட்போன்களில் வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதே போன்று ஐபோன் X ஸ்மார்ட்போனிலும் வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இவற்றை கொண்டு முற்றிலும் மடிக்கக்கூடிய சாதனங்கள் கிட்டத்தட்ட சாத்தியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

    மடிக்கக்கூடிய ஐபோன் குறித்த தகவல்கள் வெளியானாலும், இந்த ஆண்டு ஆப்பிள் வெளியீடுகளில் புதிய தொழில்நுட்பம் இடம்பெறாது என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புதிய ஐபோன் மாடல்களின் அளவு, மற்றும் அடிப்படை அம்சங்களில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டுகிறது.
    Next Story
    ×