search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருக்கும் நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2018, இரண்டாவது காலாண்டில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

    முன்னதாக புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியான நிலையில், இம்முறை ஒன்பிளஸ் 6 ஸ்பெக் ஷீட் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கேமரா செட்டப் அந்நிறுவனத்தின் முந்தைய ஒன்பிளஸ் 5T போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெக்ஸ்லைஸ் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் தகவல் அட்டை புகைப்படம் போன்று காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பார்க்க சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒப்போ ஆர்15 போன்று காட்சியளிக்கலாம் என கூறப்பட்டது.



    ஒன்பிளஸ் 6 லீக் ஆன சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
    - 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 20 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 3450 எம்ஏஹெச் பேட்டரி



    புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 7.5 மில்லிமீட்டர் தடிமனாகவும், 175 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. இதன் விலை CAD 749 (இந்திய மதிப்பில் ரூ.37,700) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×