search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி?
    X

    ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி?

    ஃபேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு, அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

    டேட்டா வெளியான விவகாரம் ஃபேஸ்புக் கணக்கை அழிக்க வைக்கும் அளவு #DeleteFacebook ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஃபேஸ்புக் கணக்கை அழிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம். எனினும் ஒவ்வொரு பயனர் குறித்து ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.

    இவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக ஃபேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோடு செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.



    விளபம்ரம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?

    - முதலில் ஃபேஸ்புக் லாக் இன் செய்ய வேண்டும்
    - அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்
    - இனி ஆட்ஸ் (விளம்பரங்கள்) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
    - இங்கு நீங்கள் விரும்புவதாக ஃபேஸ்புக்கிடம் பதிவிட்ட முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இத்துடன் நீங்கள் பின்தொடரும் ஃபேஸ்புக் பேஜ், ஆப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.
    - இதன் கீழ் ஸ்கிரால் செய்யும் போது ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களின் தகவல்களை பார்க்க முடியும். 
    - இதில் நீங்கள் கடைசியாக பயணம் செய்த இடம், ஃபேஸ்புக் பயன்படுத்த நீங்கள் உபயோகிக்கும் சாதனம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கும்.
    - உங்களது தகவல்களில் பிழை இருந்தாலோ அல்லது தவறாக பதிவிடப்பட்டு இருந்தாலோ அவற்றை அழிக்க ஃபேஸ்புக் அனுமதிக்கிறது. இவ்வாறான தகவல்கள் ஃபேஸ்புக்கில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.



    ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விவரங்கள் தவிர, உங்களை பற்றி நிறைய தகவல்களை ஃபேஸ்புக் வைத்திருக்கிறது. பயனரிடம் இருந்து ஃபேஸ்புக் வைத்திருக்கும் அனைத்து டேட்டாவையும் பயனர்கள் விரும்பும் போது ஒற்றை க்ளிக் மூலம் அவற்றை டவுன்லோடு செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்குகிறது.

    - ஃபேஸ்புக் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்
    - இதில் ஃபேஸ்புக் டேட்டாவை டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
    - இனி ஸ்டார்ட் மை ஆர்ச்சிவ் (Start My Archive) பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
    - அடுத்து உங்களின் பாஸ்வேர்டினை (கடவுச்சொல்) பதிவிட வேண்டும்

    இவ்வாறு செய்ததும் உங்களது டேட்டா டவுன்லோடு செய்ய தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். மின்னஞ்சலில் இருக்கும் டவுன்லோடு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது டேட்டா .ZIP வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.

    டவுன்லோடு செய்யும் டேட்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்கள், மெசேஜ்கள், விளபம்ரங்கள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் இடம்பெற்றிருக்கிறது.

    உங்களை ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருப்பனவற்றை தெரிந்து கொண்டதும் உங்களின் மனநிலை வித்தியாசமாகி இருக்கும். இனியும் ஃபேஸ்புக் பயன்படுத்தலாமா அல்லது #DeleteFacebook இயக்கத்தில் இணையலாமா என்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம்.
    Next Story
    ×