search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் X போன்று காட்சியளிக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்
    X

    ஐபோன் X போன்று காட்சியளிக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்

    எல்ஜி ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் புதிய போஸ்டரில் தெரியவந்துள்ளது. எனினும் புதிய போஸ்டரின் உண்மை தன்மை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    புதுடெல்லி:

    எல்ஜி ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விளம்பர் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதே போஸ்டர் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் எல்ஜி மையத்தில் காணப்பட்டிருந்தது.

    லைம் கிரீன் நிறத்தில் காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன்களில் பேங் & ஒலுஃப்சன் ஆடியோ பிரான்டிங் கொண்டிருக்கிறது. அடுத்த புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதில் எல்ஜி தின்க்மாட்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    எல்ஜி ஜி7, ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    ஸ்லாஷ்லீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. எனினும் இரண்டு மாடல்களிலும் ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரிக்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    எல்ஜி ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் MLCD பிளஸ் 1440x3120 பிக்சல் டிஸ்ப்ளே, 19:5:9 ஆப்ஸெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் எல்ஜி ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.6 அப்ரேச்சர் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 சப்போர்ட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் 2018 எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை வெளியாகி இருந்தது. அதன்படி எல்ஜி ஜி7 விலை KRW 899,800 (இந்திய மதிப்பில் ரூ.54,700), எல்ஜி ஜி7 பிளஸ் KRW 10,00,000 (இந்திய மதிப்பில் ரூ.60,700) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது, இது முந்தைய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை விட குறைவு ஆகும்.
    Next Story
    ×